| சாகும் வரம் தந்தாய் ...... |
| ----------------------------------- |
| கோபங்களைத் தாங்கித் தாங்கி |
| அரண்மனை விரித்து, |
| ஏரி கருகி |
| புழு வைத்தப் பிணமென |
| உள்நுழைந்து தீராப்பசியோடு |
| அரவெனத் தின்று துப்பினாய் |
| உன்னுலகை .. |
| இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் |
| குண்டுக் கட்டாய் |
| பறவையை ஜீரணித்தாய். |
| இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து |
| மேகத்தை உறிஞ்சி |
| கால்வழிப் பெய்தாய். |
| மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் |
| கால்பதித்து |
| யோனி காட்டி |
| வாசுகி எனை |
| முழுதாய் உள்திணித்தாய் |
| காரணமேயின்றி |
| சாகும் வரம் தந்தாய். |
| ----பாரதிசந்திரன் -- |
நன்றி......
வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....
வியாழன், 6 ஜூன், 2013
kavithai
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக