| குருவாய் ஆனவர் |
| -------------------------------- |
| மேடும் பள்ளமுமான |
| கிராமத்தில் |
| சரித்திரங்கள் உலவும் |
| பழைய வீடு. |
| வயல்வெளியும் ,சுய தொழிலும் நசுங்கத் |
| தேடித் தேடிச் சம்பாத்தியம் பண்ண |
| வான் பரந்த சொந்தங்கள் . |
| சொத்தும் சுகமும் |
| பட்டங்களாய் உருவெடுக்க |
| மாயவித்தைக் காரராய் |
| மாறிப் போனார் சிலகாலம் . |
| மிச்சம் மீதி ஒருவனுக்கே |
| ஊர் மெச்ச |
| மங்கலம் ஊதி முடித்தவுடன் |
| வான் விரிந்து பறந்தன சிட்டுகள். |
| கூடுவிட்டு கூடு பாய்ந்த |
| கலை தந்த குருவானார் சிலகாலம். |
| இருட்டுக்குள் துலாவி |
| கையேந்தி கையேந்தி |
| இதய ஓட்டை இளவரசிக்கு |
| ஏணி கொடுக்க விழைந்து |
| துணி போர்த்திச் |
| சாய்ந்து போனார் சிலகாலம் . |
| அவர் மனம் போலவே |
| கொஞ்சம் கொஞ்சமாய் |
| இறந்து கொண்டிருந்தது |
| அந்த |
| சரித்திர வீடு . |
| வைத்தியர் இல்லா ஊரில் |
| கை வைத்தியத்திலேயே |
| உயிர் ஓட விட்டார் சிலகாலம். |
| இத்தனையும் |
| மெளனமாய் மென்று |
| மொக்கை வாய் சிரிக்கும் |
| என் அப்பாவை விட |
| எந்த ஜென் துறவி |
| குருவாய் ஆனவர் |
நன்றி......
வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....
வியாழன், 6 ஜூன், 2013
குருவாய் ஆனவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக