எத்தனையோ, திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை
எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன் ஒரு உடன்படிக்கை.
நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96